சென்னை,
கறுப்பர் கூட்டம் இணையதள சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான வீடியோவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், பிரபலங்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக அந்த சேனல் நிர்வாகிகள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள கருப்பர் கூட்டம் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கறுப்பர் கூட்டம் இணையதள சேனலை முடக்க வேண்டும் என ஒரு தரப்பினரிடம் இருந்து போலீசாருக்கு புகார் மனுக்கள் அளிக்கப்பட்டது. இதைத் தொடந்து, கறுப்பர் கூட்டம் இணையதள சேனலை முடக்கக் கோரி சென்னை சைபர் கிரைம் போலீசார் யூ-டியூப் நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.