செய்திகள்

கூலி தொழிலாளி பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியானார்.

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ளது மாவிடுதிக்கோட்டை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் மைக்கேல் மகன் பால்ராஜ் (வயது51) கூலி தொழிலாளி. இவருக்கு பவுலின் என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். நேற்று மாலை மாவிடுதிக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.இதில் பால்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து பால்ராஜை மோதிய வாகனத்தை தேடி வருகின்றார்.பலியான பால்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.