செய்திகள்

பழுதடைந்த தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க முடிவு

நெய்தலூர் காலனியில் உள்ள பழுதடைந்த தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது.

தினத்தந்தி

நச்சலூர்,

கரூர் மாவட்டம், நெய்தலூர் ஊராட்சி நெய்தலூர்காலனியில் உள்ள 3-வது தெருவில்(தெற்குவீதி)சுமார் 15-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மின்கம்பங்களில் உள்ள தெருவிளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்து எரியாமல் தெருக்கள் முழுவதும் இருட்டாக உள்ளது.

மேலும் தினமும் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரத்தில் இந்த தெரு வழியாக செல்வோர் இருட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுகின்றது. மேலும் இப்பகுதி இருட்டாக இருப்பதால் பாம்புகள் மற்றும் பூச்சிகள் அருகில் உள்ள வீட்டிற்குள் புகுந்து விடுகின்றன. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

தேர்தலை புறக்கணிக்க முடிவு

இது குறித்து பல முறை ஊராட்சி செயலாளரிடம் கூறியும் இது வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதனால் ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் அடிப்படை தேவையான தெருவிளக்கை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால், இப்பகுதி பொதுமக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யபோவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு