செய்திகள்

மறு வாக்கு எண்ணிக்கை கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளர் மனு

மறு வாக்கு எண்ணிக்கை கோரி தர்மபுரி கலெக்டர் கலெக்டர் அலுவலகத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒரு கோரிக்கை மனு அளித்தார்.

தினத்தந்தி

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் ஏரியூரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- ஏரியூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 4-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டேன். வாக்கு எண்ணிக்கையின்போது மையத்தில் இருந்து வெளியே சென்ற என்னை மீண்டும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. எனக்கு பதிவான வாக்குகள் சரியாக எண்ணப்படவில்லை. எனக்கு 185 வாக்குகள் பதிவானதாக மைக்கில் அறிவித்தனர். எனவே 4-வது வார்டில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு