செய்திகள்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தினத்தந்தி

திருச்சி,

சேலம் உருக்காலை, பாதுகாப்பு தொழிற்சாலைகள் மற்றும் ரெயில்வே துறைகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்தும், முதலாளிகளுக்கு சாதகமாக 44 தொழிலாளர் சட்டங்களை 4 ஆக திருத்தும் மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச.(எல்.பி.எப்.), சி.ஐ.டியு, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு தலைவரும் தொ.மு.ச. தலைவருமான சிவபெருமாள் தலைமை தாங்கினார். தொ.மு.ச. செயலாளர் பி.குணசேகரன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்திரளான தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்