செய்திகள்

சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

தேய்பிறை அஷ்டமியையொட்டி சிவன் கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

ஆக்கூர்,

செம்பனார்கோவிலில் உள்ள சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கோவிலில் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் சொர்ண காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சொர்ண காலபைரவரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதேபோல் பரசலூரில் உள்ள வீரட்டேஸ்வரர் கோவில், குருமாணக்குடியில் உள்ள ஆயிரங்கண்ணுடையார் கோவில், மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர் கோவில், கீழிருப்பு சிதம்பரேஸ்வரர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆக்கூரில் உள்ள தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கீழையூர் கடைமுடிஈஸ்வரர் கோவில், பொன்செய் நற்றுணைஈஸ்வரர் கோவில், முடிகண்டநல்லூர் குழம்பீஸ்வரர் கோவில், மேலப்பாதி ஜுரகரேஸ்வரர் கோவில், விளநகர் துறைக்காட்டும் வள்ளலார் கோவில் ஆகிய கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு