செய்திகள்

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு கொரோனா? முழு விவரம்

சென்னையில் இன்று 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இன்று 63,182 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 22,23,019 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். 55வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.

சென்னையில் இன்று ஒருநாளில் 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக, விருதுநகர் மாவட்டத்தில் 423 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 419 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 349 பேருக்கும், மதுரையில் 326 பேருக்கும், தூத்துக்குடியில் 313 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியான பாதிப்பு விவரத்தை கீழ் காணும் பட்டியலில் காணலாம்.