செய்திகள்

இனிய நண்பர் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்; திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்

இனிய நண்பர் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பர் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். ரஜினி நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில், அன்பர் நண்பர் திரு.ரஜினிகாந்துக்கு நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன். உங்கள் நான் என்று பதிவிட்டுள்ளார்.