புதுடெல்லி,
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, கூகுள் நிறுவனம் நேற்று சிறப்பு டூடுல் வெளியிட்டது. பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி இருப்பதை குறிப்பிடும் வகையில் அது அமைந்திருந்தது.
டாக்டர், போலீஸ், விஞ்ஞானி உள்ளிட்ட துறைகளில் பெண்கள் சாதனை படைத்திருப்பதை குறிப்பிட்டு இருந்தது.
மேலும், சிறப்பு அனிமேஷன் வீடியோவையும் கூகுள் வெளியிட்டது. மகளிர் தினத்தின் வரலாற்று பின்னணி, அதன் முக்கியத்துவம் ஆகியவை அதில் விளக்கப்பட்டு இருந்தன.