சென்னை,
பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு இடையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மேயர் தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக தேர்தல் நடத்த முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதுபோல், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.