செய்திகள்

கருத்துக் கணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்

கருத்துக் கணிப்பால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பெரும்பாலும் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்றே தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைவிட அதிகமாக, 300 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்றும் சில கணிப்புகள் தெரிவித்தன.

இந்த நிலையில், கருத்துக் கணிப்புகளால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று உத்தரபிரதேச கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில், பிரியங்கா காந்தி கூறியிருப்பதாவது:- கருத்துக்கணிப்பால் யாரும் சோர்வடைய வேண்டாம். நம்பிக்கையும் இழக்க கூடாது. நமது கடின உழைப்பு வெற்றியை தரும். நமது உழைப்பு வீண் போகாது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியேயும், ஓட்டு எண்ணும் மையத்திற்குள்ளும் நமது முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்