நெல்லிக்குப்பம்,
கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நல்லாத்தூர் ஊராட்சியில் உள்ள குளம், குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாருவதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக ஒன்றியக்குழு தலைவர் தெய்வபக்கிரி வரவேற்றார். இதில் கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமரன், தாசில்தார் செல்வக்குமார், நகர செயலாளர் குமரன், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட பேரவை பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் கல்யாணி ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், மதிவாணன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, முன்னாள் அட்மா குழு தலைவர் சபரி, முன்னாள் கவுன்சிலர் கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.