செய்திகள்

தனது மனைவி நிம்மதியாக தூங்க புதிய கருவி கண்டுபிடிப்பு : ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் அசத்தல்

இன்றைய இளைஞர்கள் பலர் இரவில் தூக்கத்தை தொலைப்பதற்கு, சமூக வலைத்தளங்களில் ஒன்றான ‘பேஸ்புக்’கும் முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

தினத்தந்தி

சான்பிரான்சிஸ்கோ,

இளைஞர்கள் பேஸ்புக்கை அளவான முறையில் பயன்படுத்தி, நிம்மதியான தூக்கத்தை பெற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையின் பேஸ்புக் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க், தனது மனைவி நிம்மதியாக தூங்க பிரத்யேக ஒளிரும் மரப்பெட்டி ஒன்றை உருவாக்கியுள்ளார். தனது மனைவி பிரிசில்லா, இரவில் தூக்கத்தின் இடையில் திடீரென எழுந்து நேரத்தை பார்ப்பது, அதனால் தூக்கம் கெடுவது போன்ற சின்ன சின்ன சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்தி மனைவியை நிம்மதியாக தூங்க வைக்க ஏதுவாக இந்த பிரத்யேக ஒளிரும் மரப்பெட்டியை அவர் வடிவமைத்துள்ளார். இந்த ஒளிரும் மரப்பெட்டி காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மிக மங்கலான ஒளியை வீசும். இந்த நேரமானது, அவர்களின் 2 பெண் குழந்தைகளும் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் நேரம். இதன்மூலம் அலார ஓசைக்காக காத்திருக்காமல் அந்த மங்கலான ஒளிக்கு பின் பிரிசில்லா பதற்றம் இன்றி நிம்மதியாக எழ முடியும்.

இந்த ஒளிரும் மரப்பெட்டி தான் நினைத்ததை விட சிறப்பாக செயல்படுவதாகவும், தன் நண்பர்கள் வட்டாரத்தில் அது பிரபலமாகி வருவதாகவும் கூறிய மார்க் ஜூக்கர்பெர்க், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அதனை தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்