சென்னை
சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். தமிழகத்தின் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்யும். மேலும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 41 செ.மீ மழை பெய்துள்ளது. மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என கூறினார்.