செய்திகள்

பாக்தாத் இராணுவ தளத்தில் விபத்தில் சிக்கிய அமெரிக்க இராணுவ விமானம் 4 வீரர்கள் காயம்

பாக்தாத்தில் உள்ள இராணுவ தளத்தில் அமெரிக்க இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

பாக்தாத்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இராணுவ தளத்தில் அமெரிக்க இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படை தெரிவித்துள்ளது.

ஈராக்கின் தாஜி முகாமில் அமெரிக்கா இராணுவத்தின் சி-130 விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு வீரர்கள் காயமடைந்தனர், இது ஒரு விபத்து என்று கருதப்படுவதாக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையின் செய்தித் தொடர்பாளர் மைல்ஸ் காகின்ஸ் தெரிவித்தார்.

விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சுவரில் மோதியதால் சேதமடைந்து சிறிய தீ விபத்து ஏற்பட்டதாக காகின்ஸ் கூறினார்.விமானத்தில் இருந்த நான்கு வீரர்கள் காயமடைந்தனர், அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை மற்றும் தாஜி முகாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எதிரிகளின் செயல்பாடு இருப்பதாக சந்தேகப்படவில்லை, இந்த சம்பவம் விசாரணையில் உள்ளது என காகின்ஸ் குறிப்பிட்டார்.விமானத்தில் ஏழு பணியாளர்கள் மற்றும் 26 பயணிகள் இருந்ததாக ஈராக் அதிகாரி தெரிவித்தார். காயமடைந்தவர்களில் இரண்டு விமானிகளும் அடங்குவர் என கூறினார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்