செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு சென்னையை ஒட்டி உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகம்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், சென்னையை ஒட்டி உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக இருந்தது.

சென்னை,

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் சுப்ரீம் கோர்ட்டு அனுமதியுடன் கடந்த மே 16-ந் தேதி திறக்கப்பட்டன. மது கடைகள் திறக்கப்பட்டதை மது பிரியர்கள் தங்களது சொர்க்க வாசல் திறந்ததை போன்று கருதினர். தமிழக அரசு வினியோகித்த டோக்கன் அடிப்படையில் மது பாட்டில்களை மது பிரியர்கள் வாங்கிச் சென்றனர்.

பின்னர், எத்தனை பேர் வேண்டுமானாலும் எவ்வளவு மதுபானம் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம் என்றும், மதுக்கடைகள் திறந்து இருக்கும் நேரத்தையும் அதிகரித்து தளர்வு வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மதுப்பிரியர்கள் முட்டி மோதாமல் இயல்பான நிலையில் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். அதற்கு மதுப்பிரியர்களிடம் பணப்புழக்கம் இல்லாததும் ஒரு காரணமாக அமைந்து இருந்தது.

பெற்ற குழந்தை போன்று...

இந்த நிலையில், இன்று(வியாழக்கிழமை) முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் போவதாக அரசு அறிவித்து உள்ளது. இதனால், மதுக்கடைகள் மூடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற எண்ணத்தில் நேற்று மதுப்பிரியர்கள் மதுக்கடைகளில் அலைமோதினர்.

மழைக் காலத்திற்கு தேவையான உணவை எறும்புகள் சேமித்து வைப்பது போன்று மதுப்பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்று சேமிக்கத் தொடங்கினர். அதற்காக, மதுப்பிரியர்கள் துணிப்பைகளில் மது பாட்டில்களை வாங்கி நிரப்பிக் கொண்டு, பெற்ற குழந்தையை அரவணைத்து எடுத்துச் செல்வதை போன்று மதுபாட்டில்கள் வைக்கப்பட்ட பைகளை மார்போடும், வயிறோடும் வைத்து கட்டி அணைத்து கொண்டுச் சென்றனர்.

அமோக மது விற்பனை

பெண்களும், டாஸ்மாக் கடைகளில் கூடி நின்ற ஆண்களுக்கு தாங்களும் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று கருதும் வகையில் பைகளை கொண்டு வந்து மது பாட்டில்களால் நிரப்பி எடுத்துச் சென்றனர். இதனால், சென்னை புறநகர் பகுதிகளை சுற்றி உள்ள பிற மாவட்ட டாஸ்மாக் கடைகளில் வழக்கத்துக்கு மாறாக நேற்று ஒரே நாளில் மட்டும் அமோக மது விற்பனை நடைபெற்றது.

இதன் காரணமாக மதுக்கடைகளில் மது பாட்டில்கள் விற்று தீர்ந்ததால், மதுப்பிரியர்கள் வாங்க நினைத்த மது பாட்டில்கள் கிடைக்காத நிலையில், கிடைத்தவற்றை வாங்கிச் சென்றனர்மதியம் 1.30 மணி வரை அங்கு சரக்கு இல்லை. சரக்கு இப்போது வரும்... இப்போது வரும்... என்ற எண்ணத்தில் மதுப்பிரியர்கள் காத்து இருந்தனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு