செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் 234 பேர் சென்னை வந்தனர்

வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 234 பேர் சென்னை வந்துள்ளனர்.

ஆலந்தூர்,

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கிய இந்தியர்கள், மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

இந்த நிலையில் இலங்கையில் சிக்கி தவித்த 15 பெண்கள் உள்பட 90 பேருடனும், ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இருந்து 45 பெண்கள் உள்பட 144 பேருடனும் 2 சிறப்பு விமானங்கள் சென்னை வந்தன.

இதில் வந்த 234 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை முடிந்ததும், அங்கேயே தமிழக பொது சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அனைவரும் அரசு பஸ்களில் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஓட்டல்களில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...