சென்னை,
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அனைத்து பள்ளி மாணவர்களும் வருகிற 4-ந்தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணி முதல் தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பள்ளிக்கு வரும் தேர்வர்கள், பெற்றோர் கட்டாயம் முககவசம் அணிந்திருப்பதுடன், சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.