செய்திகள்

மதுரையில் வரும் 12 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மதுரையில் வரும் 12 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

மதுரை,

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி உள்ளன. இவற்றில், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த சுழலில் மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் இன்று 280 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனோ பாதித்தோர் எண்ணிக்கை 3,703 ஆக உயர்ந்துள்ளது. 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,405 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் முழு ஊரடங்கு மேலும் 7 நாட்கள் (வரும் ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை) நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதன்படி மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களில் முழுமுடக்கம் நீட்டிக்கப்பட உள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முழு ஊரடங்கு காலத்தில் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு இரு முறை கிருமி நாசினி தெளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நாளையுடன் முழு ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் தமிழக அரசு இந்த நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்