செய்திகள்

நாமக்கல், திருச்செங்கோட்டில் காந்தி ஜெயந்தி விழா

நாமக்கல், திருச்செங்கோட்டில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

திருச்செங்கோடு,

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி மற்றும் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் விழா மணிக்கூண்டு அருகில் கொண்டாடப்பட்டது. மேலும் காமராஜர் நினைவு தினமும் அனுசரிக்கப்பட்டது.

மாவட்ட தலைவர் ஷேக்நவீத் தலைமை தாங்கி, காந்தியடிகள் மற்றும் காமராஜர், லால்பகதூர் சாஸ்திரி உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சுப்பிரமணியன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நாமக்கல் நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த காந்தி பிறந்தநாள் விழாவிற்கு முன்னாள் மாவட்ட தலைவர் டாக்டர் செழியன் தலைமை தாங்கி, காந்தி உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சித்திக், குமரன், மாவட்ட துணைத்தலைவர் மாணிக்கம், முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு பெரிய பாவடி செங்குந்தர் திருமண மண்டபம் அருகே காந்தி சிலை முன்பு ஒட்டக்கூத்தர் நற்பணி மன்றத்தினர் சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருச்செங்கோடு நாடார் குல குருமடத்தலைவர் என்.நடேசன் தலைமையில் காந்தி ஜெயந்தி விழா, காமராஜர் நினைவு நாளையொட்டி தலைவர்களின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தேச ஒற்றுமைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் உறுதிமொழி ஏற்றனர்.

இதில் நாடார் திருமண மண்டப துணை செயலாளர் செங்கோட்டுவேலு, சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் சரவணகுமார், நாடார் பேரவை மாவட்ட தலைவர் தங்கவேல், பாஸ்கர், மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு நகர காங்கிரஸ் சார்பில் திருச்செங்கோடு புதிய பஸ் நிலையத்தில் உள்ள காமராஜர் சிலை முன்பு காமராஜர் நினைவு நாள், நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட தலைவர் தனகோபால் சிறப்புரை ஆற்றினார். இதில் வக்கீல் ராஜேஸ்வரன், மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, எலச்சிபாளையம் வட்டார தலைவர் ராஜசேகர், நகர துணைத்தலைவர் காசிவிஸ்வநாதன் மற்றும் மாவட்ட நகர தாலுகா நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்