புது டெல்லி,
இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் இன்று அளித்துள்ள பேட்டியில், கோவாக்சின் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசிக்கு உரிய அங்கீகாரம் வழங்கியவுடன் ஜெர்மனி அரசு கோவாக்சின் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஜெர்மனி ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. இதனால் கோவிஷீல்டு போட்டுக் கொண்டவர்கள் ஜெர்மனி செல்ல எவ்வித சிரமங்களும் இல்லை.
உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப் படாத பிற தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் அங்கு சில நாட்கள் குவாரண்டைனில் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காண்பித்த பின் ஜெர்மனிக்குள் செல்ல அனுமதி வழங்கபட்டுள்ளது, குவாரண்டைனில் இருந்தும் விலகிக் கொள்ளளாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.