செய்திகள்

பாட்டி காலத்து 150 விளையாட்டு

அழிந்து வரும் பாரம்பரிய விளையாட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் களம் இறங்கி வெற்றி கண்டிருக்கிறார்கள், அர்ச்சனா - சங்கீதா. நெருங்கிய தோழிகளான இவர்கள் இருவரும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர்கள். அயராத தேடலின் பயனாக 150 வகையான பாரம்பரிய விளையாட்டுகள் பற்றிய தகவல்களை திரட்டி இருக்கிறார்கள்.

தினத்தந்தி

ஒவ்வொரு பாரம்பரிய விளையாட்டுகளையும் ஆவணப்படுத்தும் நோக்கில் நேர்த்தியாக அவைகளை பழமைமாறாமல் சேகரித்துள்ளார்கள். அதேவேளையில் சிறுவர்களை கவரும் வகையில் வண்ணங்களிலும், வடிவங்களிலும் புதுமையை புகுத்தியிருக்கிறார்கள். மேலும் அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையிலும், அழியாமல் பாதுகாக்கும் நோக்கத்துடனும் அருங்காட்சியம் ஒன்றையும் அமைத்திருக்கிறார்கள். அங்கு 150 வகையான விளையாட்டு களுக்கான பொருட்களும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பெரும்பாலானவை மஞ்சள் ஒளி விளக்குகளின் பின்னணியில் பளபளக்கும் மர வேலைப்பாடுகளுடன் அழகுடன் மிளிர்கின்றன. அவைகளை பார்வையிடும் பலரும், பல விளையாட்டு பொருட்களை தாங்கள் இதுவரை பார்த்ததில்லை என்கிறார்கள். அரிய விளையாட்டு பொருட்களை விரும்பி வாங்கவும் செய்கிறார்கள்.

நாங்கள் இருவரும் 12 ஆண்டுகால தோழிகள். நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் பேசப்படும் விஷயங்களில் பெரும்பாலானவை குழந்தைகளை பற்றியதாகத்தான் இருக்கும். இன்றைய தலைமுறை குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். செல்போன்களில் விளையாடி பொழுதை போக்குகிறார்கள். அதனால் சிறுவயதிலேயே நிறைய பேர் கண்ணாடி அணிகிறார்கள். அப்போதுதான் குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக்கொடுக்க முடிவு செய்தோம். நாங்கள் சிறுமிகளாக இருந்தபோது ஆடு புலி ஆட்டம் பிரபல மானது. அந்த விளையாட்டில் எதிரியை வீழ்த்த யோசித்து நிதானமாக திட்டம் வகுக்க வேண்டும். அத்தகைய விளையாட்டுகள் கணித அறிவை மேம்படுத்தவும் பெரிதும் உதவியாக இருந்தன.

எங்கள் பிள்ளைகளும் அத்தகைய விளையாட்டுகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் நாங்கள் அறிந்திருந்த அனைத்து விளையாட்டுகளின் பட்டியலையும் சேகரித்தோம். பின்னர் எங்கள் தாத்தா - பாட்டியுடன் கலந்து பேசி அவர்கள் விளையாடிய விளையாட்டுகள் பற்றிய தகவல்களை சேகரித்தோம். தொடர்ந்து பழங்கால விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருக்கும் மக்களையும் சந்தித்தோம். இறுதியில் ஓவிய கலைஞர் களின் துணையோடு வரைபடங்களை தயார் செய்து விளையாட்டு வடிவங்களை உருவாக்கினோம் என்கிறார், அர்ச்சனா.

இந்த விளையாட்டு வடிவங்கள் அனைத்தையும் கைகளாலேயே தயார் செய்திருக்கிறார்கள். தரமான மரப் பலகைகளையும், ரசாயன கலப்பில்லாத மூலப்பொருட்களையும் அதற்காக பயன்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக அவற்றுக்கு வர்ணம் பூசுவதற்கு இயற்கை சாயங்களையே பயன் படுத்தி இருக்கிறார்கள்.

பாரம்பரிய விளையாட்டுகள் பெரும்பாலும் குழுவாக இணைந்து விளையாடும் ஆர்வத்தை தோற்றுவிக்கும். குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடும்போது மகிழ்ச்சி மேலோங்கும். விட்டுக்கொடுத்தல், சகிப்பு தன்மை, பொறுமை, யதார்த்த வாழ்க்கை போன்ற பல விஷயங்களை அவைகளில் இருந்து கற்றுக்கொள்ளலாம் என்றும் அர்ச்சனா சொல்கிறார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை