செய்திகள்

ஜூன் மாதத்திற்கான மொத்த ஜி.எஸ்.டி. ரூ.90,917 கோடி

ஜூன் மாதத்திற்கான மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூபாயாக 90 ஆயிரத்து 917 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூன் மாதத்திற்கான மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூபாயாக 90 ஆயிரத்து 917 கோடி ரூபாய் வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ஆக 18 ஆயிரத்து 980 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி ஆக 23 ஆயிரத்து 970 கோடியும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ஆக 40 ஆயிரத்து 302 கோடியும் கிட்டியுள்ளது.

இதில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய பங்கை செலுத்திய பிறகு மத்திய ஜி.எஸ்.டி. வருவாயாக 32 ஆயிரத்து 305 கோடி ரூபாயும், மாநில ஜி.எஸ்.டி. வருவாயாக 35 ஆயிரத்து 87 கோடி ரூபாயும் கிட்டியுள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் வசூலான தொகையை விட இந்த வருடம் 9 சதவிகிதம் குறைந்துள்ளதாக வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்