செய்திகள்

மார்ச் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது

மார்ச் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-

ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல் வருவாய் மார்ச் மாதம் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை படைத்து இருக்கிறது. இதில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.20 ஆயிரத்து 353 கோடி, மாநில அரசின் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.27 ஆயிரத்து 520 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.50 ஆயிரத்து 418 கோடி, கூடுதல் வசூல் ரூ.8 ஆயிரத்து 286 கோடி ஆகும். அதே சமயம் கடந்த ஆண்டில் இதே மார்ச் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.92 ஆயிரத்து 167 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

2018-19-ம் ஆண்டின் சராசரி ஜி.எஸ்.டி. வசூல் ரூ.98 ஆயிரத்து 114 கோடி. இது, 2017-18-ம் ஆண்டை ஒப்பிடும் போது 9.2 சதவீதம் கூடுதலாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை