செய்திகள்

தொடர் அவமானம்: மனைவியை 40 முறை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

தொடர்ந்து அவமானப்படுத்தியதால் மனைவியை 40 முறை கத்தியால் குத்தி கணவர் கொலை செய்துள்ளார்.

குர்கான்

அரியானாவில், தூங்கிக்கொண்டிருந்த மனைவியை சுமார் 40 முறை வயிற்றில் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியானா மாநிலத்திலுள்ள குருகிராமை சேர்ந்தவர் பங்கஜ். இவரது மனைவி வன்ஷிகா சர்மா. இவர்களுக்கு 2017-ம் ஆண்டு ஏப்ரல் 27 ந்தேதி திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணம் நடந்ததில் இருந்து இருவருக்கும் இடையே தொடர்ந்து குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. அடிக்கடி கணவரை வன்ஷிகா அவமதித்து வந்து உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் பங்கஜ், கடந்த இரண்டு மாதங்களாகத் திட்டம் போட்டு தனது உதவியாளர் நசீம் அகமதுவுடன் இணைந்து வன்ஷிகாவை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூங்கிக்கொண்டிருந்த வன்ஷிகாவை கார் ஸ்பானரைக் கொண்டு தலையில் பலமாகத் தாக்கியும், ஆத்திரம் தீர வயிறு மற்றும் உடலின் பிறபாகங்களில் சுமார் 40 முறை கொடூரமாக குத்தியும் இந்தக் கொலையைச் செய்துள்ளார்.

வன்ஷிகாவின் தந்தை புகார் செய்ததை அடுத்து பங்கஜையும் அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...