செய்திகள்

எங்களுக்கு வேலையில்லை என்று நினைக்கிறீர்களா? ஊடகங்கள் மீது குமாரசாமி காட்டம்

எங்களுக்கு வேலையில்லை என்று நினைக்கிறீர்களா? என ஊடகங்களை குமாரசாமி கடுமையாக விமர்சித்து நேற்று பேசினார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார். மேலும், ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருவதாக கூறினார். மைசூருவில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய குமாரசாமி இது குறித்து கூறியதாவது:- எங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்த நீங்கள் (மீடியா) யார்? எங்களைப் போன்ற அரசியல்வாதிகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

எங்களுக்கு வேலையில்லை என்று நினைக்கிறீர்களா? நாங்கள் கார்ட்டூன் சித்திரங்கள் போல தோன்றுகிறோமா? எல்லாவற்றையும் நகைச்சுவையாக காட்ட உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தது? எங்களை சிறுமைப்படுத்த நீங்கள் யார்? உங்களைப் பற்றி எனக்கு பயமும் இல்லை, கவலையுமில்லை. ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு