செய்திகள்

தமிழகத்தில் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது

தமிழகத்தில் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது, வழக்கத்தைவிட வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

தினத்தந்தி

தமிழகத்தை நோக்கி வந்த பானி புயல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. இதனால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற போதிலும் புயலின் திசைவேக மாற்றம் காரணமாக நிலக்காற்றை கடற்பகுதிக்குள் இழுத்துச் சென்றதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் நாளை சனிக்கிழமை முதல் தொடங்குகிறது. இது வருகிற 29ந்தேதி வரை நீடிக்கிறது. இதனால் இந்த காலக்கட்டத்தில் அனல் காற்று வீசுவதுடன் வழக்கத்தை விட வெப்பமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்