செய்திகள்

ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் அபாய எச்சரிக்கை ஒலியால் பரபரப்பு பயணிகள் அலறியடித்து ஓட்டம்

சென்னை ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் நேற்று திடீரென அபாய மணி ஒலித்தது. இதனால் அங்கிருந்த பயணிகள் அனைவரும் பதற்றம் அடைந்து, அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.

தினத்தந்தி

சென்னை,

ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து ஒளித்திரைகளிலும் தீ பரவும் வாய்ப்பு உள்ளதால், பயணிகள் உடனடியாக நிலையத்தை விட்டு வெளியேறவும் என்ற வாசகம் வெளியிடப்பட்டது. மேலும் ஒலிபெருக்கியிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து அங்கு வந்த ரெயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

மேலும் ஐகோர்ட்டு மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்த ரெயில்களில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்களும், எசுபிளனேடு போலீசாரும் விரைந்து வந்து சோதனை செய்தனர். சோதனையில் பயணி ஒருவர் ஆர்வம் தாங்காமல் எச்சரிக்கை அபாய பொத்தானை அழுத்தியது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து மீண்டும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை