ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான நிகழ்ச்சியில் அக்கட்சியின் கரீம்நகர் எம்.பி. பண்டி சஞ்சய்குமார் பேசினார்.
அப்போது அவர், எங்களைப் போன்ற சில தேசபக்தர்கள் குண்டூர் அருகே உள்ள தெனாலியில் பேரணி சென்றபோது தேசதுரோகிகள் சிலர் கற்களால் தாக்கினார்கள். நாங்கள் பயந்துவிட்டோமா? நீங்கள் கற்களை எடுத்தால், நாங்கள் வெடிகுண்டுகளை எடுப்போம். நீங்கள் கம்புகளை எடுத்தால், நாங்கள் கத்திகளை எடுப்போம். நீங்கள் ராக்கெட்டுகளால் தாக்கினால், நாங்கள் ஏவுகணைகளால் தாக்குவோம். அதனால்தான் நான் சொன்னேன், போர் தொடங்கிவிட்டது என்றார்.