சென்னை,
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனும், மாலை முரசு அதிபருமான மறைந்த பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 85-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில் அவருடைய உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் படத்திற்கு அவரது மூத்த மகனும், மாலை முரசு நிர்வாக இயக்குனருமான இரா.கண்ணன் ஆதித்தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, மாலை முரசு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊழியர்களும் மரியாதை செலுத்தினார்கள்.
மேலும், அமைச்சர்களும், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரமுகர்களும் பா.ராமச்சந்திர ஆதித்தனார் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். அதன் விவரம் வருமாறு:-
வைகோ - ஜி.கே.வாசன்
அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பாண்டியராஜன். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்ட தலைவர் சிவராஜ சேகர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், வணிகப் பிரிவு தலைவர் ஆர்.எஸ்.முத்து.
தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம். பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன். சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன். புதிய நீதிக்கட்சியின் மாநில இணை பொதுச் செயலாளர் ஆர்.வி.சேதுராமன். மக்கள் தேசிய கட்சித் தலைவர் சேம.நாராயணன். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொறுப்பாளர் வெற்றிவேல். அகில இந்திய காந்தி காமராஜ் கட்சி தலைவர் இசக்கி முத்து.
நாடார் சங்கங்கள் - பிரமுகர்கள்
தொழிலதிபர் தனுஷ்கோடி. தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கத்தின் தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால். நெல்லை நாடார் சங்கத் தலைவர் பத்மநாபன். தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ். நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன். பனங்காட்டு நாடார் பேரவை ஒருங்கிணைப்பாளர் அ.ஹரி நாடார். வெங்கடேச நாடார் இயக்கத் தலைவர் எஸ்.ஏ.சுபாஷ் பண்ணையார். காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் தலைவர் சிலம்பு சுரேஷ். தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர் டி.விஜயகுமார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன். தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் மு.அருண்குமார். ம.பொ.சி. அறக்கட்டளை நிறுவனர் மாதவி பாஸ்கரன். மனித உரிமை ஆணையத்தின் தென்னிந்திய தலைவர் கே.வி.பி.பூமிநாதன். தமிழ் அன்னை கலைமன்ற செயலாளர் பி.ரவி. சர்வதேச வணிகர்கள் சம்மேளன தலைவர் கராத்தே சந்துரு. அகில இந்திய நாடார் சக்தி ஒருங்கிணைப்பாளர் சி.சண்முக பாலாஜி. தமிழ் தன்னுரிமை இயக்கத்தின் தலைவர் மு.ராமச்சந்திரன். நாடார் எழுச்சி பேரவைத் தலைவர் எம்.சின்னதம்பி. தமிழ்நாடு மேடை நாடக கலைஞர்கள் சங்க கவுரவ தலைவர் கடையம் ராஜூ.
நடிகர்கள் மன்சூர்அலிகான், சின்னிஜெயந்த், கஞ்சா கருப்பு, முத்துக்காளை. நடிகை லதா. திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொறுப்பாளர் டி.சிவா. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் மடாதிபதி. காமராஜரின் பேத்தி கமலிகா.