செய்திகள்

தனித்தனி விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் சாவு

தனித்தனி விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே உள்ள தி.ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் இருசப்பன் மகன் மகேந்திரன்(வயது 39), விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் தி.ஏந்தலில் இருந்து தொழுதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். வெங்கனூர் கைகாட்டி அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று, மகேந்திரன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மகேந்திரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கம்மாபுரம் அடுத்த டாக்கா குடியிருப்பு அருகே விருத்தாசலம் கடலூர் சாலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த நபர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஊ.மங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து இறந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்