செய்திகள்

சென்னையில் கொரோனாவில் இருந்து 21,796 பேர் பூரண குணம் - 17,285 பேருக்கு சிகிச்சை

சென்னையில் கொரோனாவில் இருந்து 21,796 ஆயிரம் பேர் பூரணம் குணம் அடைந்தனர். 17,285 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் 39 ஆயிரத்து 641 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சைக்கு பின்னர்21 ஆயிரத்து 796 பேர் பூரண குணம் அடைந்து உள்ளனர். மருத்துவனைகள், கொரோனா முகாம்கள், வீட்டு கண்காணிப்பு என 17 ஆயிரத்து 285 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5 ஆயிரத்து 981 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 3 ஆயிரத்து 647 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றுமுன்தினம் நிலவரப்படி 529 பேர் பலியாகி உள்ளனர். இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 97 பேரும், தண்டையார்ப்பேட்டை மண்டலத்தில் 72 பேரும், திரு.வி.க நகர் மண்டலத்தில் 71 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 70 பேரும் இறந்துள்ளனர்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1,245 பேர் அடங்குவார்கள்.

அதிகபட்சமாக 30-39 வயதினர் 7 ஆயிரத்து 720 பேரும், 20-29 வயதினர் 7 ஆயிரத்து 155 பேரும், 40-49 வயதினர் 6 ஆயிரத்து 694 பேரும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். இதில் ஆண்களையே அதிகமாக சிக்கி இருக்கிறார்கள்.

தன்னம்பிக்கை ஊட்டுகிறது

கொரோனா பிடியில் சிக்குவோர்கள் எண்ணிக்கை ஒரு புறம் இருந்தாலும், குணம் அடைந்து வீடு திரும்புவர் களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களுக்கு தைரியம், தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்து உள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்