செய்திகள்

சென்னையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம்

சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சென்னை,

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசாரம், 15 நாட்களுக்கு சென்னை குடிநீர் வாரிய அலுவலக எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து 6 பிரசார வாகனங்கள் மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில், பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் அசோக் டோங்ரே, சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குனர் த.பிரபுசங்கர், சென்னை குடிநீர் வாரியத்தின் நிதி இயக்குனர் கே.முத்துக்குமாரசாமி, தலைமை பொறியாளர் ஆர்.சிவசண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...