செய்திகள்

சென்னையில் ‘டாஸ்மாக்’ ஊழியர்கள் போராட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தமிழ்நாடு ‘டாஸ்மாக்’ பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

சென்னை,

மதுவிலக்கு மானியக் கோரிக்கையில் டாஸ்மாக் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் நா.பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் த.தனசேகரன், மாநில பொருளாளர் கே.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தின்போது நா.பெரியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

டாஸ்மாக் மதுபான விற்பனை பிரிவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசு மானிய கோரிக்கையில் நிறைவேற்ற வேண்டும்.

டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனைக்கு கேரளாவில் பின்பற்றப்படும் முறையை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கடையின் நிர்வாகம் திருத்தி அமைக்க வேண்டும். இறந்த பணியாளர் குடும்பங்களை கருணையோடு பரிசீலித்து அவர்களுக்கு உதவ வேண்டும். பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் தரும் திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அடுத்த கட்டமாக கடுமையான போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு