செய்திகள்

டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது

டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா,கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

புதுடெல்லி

காவிரி நீர் பங்கீடு தொடர்பான, காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம், அக்குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழக அரசு சார்பில், திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவேரி தொழில்நுட்பக் குழுவின் துணைத் தலைவர் ராம்குமார், உறுப்பினர் பட்டாபிராமன், உதவி செயற்பொறியாளர் கண்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

அதே போல் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் அந்தந்த மாநில பிரதிநிதிகள் காவிரி நீர் தொடர்பான தங்கள் தரப்பு புள்ளி விவரங்கள் மற்றும் கோரிக்கைகளை சமர்ப்பிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு