செய்திகள்

கயத்தாறில் ஆழ்குழாய் கிணறு அமைத்தபோது லாரியில் தீப்பிடித்தது

கயத்தாறில் ஆழ்குழாய் கிணறு அமைத்தபோது லாரியில் தீப்பிடித்தது. அப்போது டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு லாரியை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொண்டு சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினத்தந்தி

கயத்தாறு,

கயத்தாறு உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மதியம் ஆழ்குழாய் கிணறு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் எந்திரத்துடன் கூடிய லாரியை வரவழைத்தனர். தொடர்ந்து அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடந்தது. அப்போது அந்த லாரியின் ஜெனரேட்டர், கம்பிரஷர் எந்திரங்களில் திடீரென்று தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் மளமளவென்று தீப்பற்றி எரிந்தது. உடனே லாரி டிரைவரான திருச்சியைச் சேர்ந்த பாண்டியன் (வயது 50) சாமர்த்தியமாக அந்த லாரியை சுமார் 200 மீட்டர் தூரம் மெதுவாக ஓட்டிச் சென்று, ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டு பகுதியில் நிறுத்தி விட்டு, லாரியில் இருந்து கீழே குதித்து தப்பினார். சிறிதுநேரத்தில் லாரி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.பெரும் விபத்து தவிர்ப்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கழுகுமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் லாரி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் ஆகும். இதுகுறித்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்து நிகழ்ந்ததும் டிரைவர் லாரியை சாமர்த்தியமாக காட்டு பகுதிக்கு ஓட்டிச் சென்றதால், அருகில் உள்ள வீடுகளில் தீப்பிடிக்காமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது