செய்திகள்

மூலைக்கரைப்பட்டியில் ஜவுளிக்கடையில் தீ விபத்து ரூ.6 லட்சம் துணிகள் எரிந்து நாசம்

மூலைக்கரைப்பட்டியில் ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.6 லட்சம் மதிப்பிலான துணிகள் தீயில் எரிந்து நாசமாகின.

தினத்தந்தி

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள உன்னங்குளத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 45). இவர் மூலைக்கரைப்பட்டி வடக்கு பஜாரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.

நள்ளிரவு 2 மணி அளவில் இவரது கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அருகில் உள்ள கடைகள், வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். மேலும் கடையில் எரிந்த தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் வழக்குப்பதிவு செய்தார். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்