ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர்,கோத்தகிரி பகுதிகளில்அயல்நாட்டு காய்கறிகளானபுருக்கோலி,ஐஸ்பெர்க்,லெட்யூஸ், சிவப்பு முட்டைகோஸ்,செலரி, லீக்ஸ்,சைனீஸ்முட்டைகோஸ் போன்றவற்றை விவசாயிகள்அதிகளவில்பயிரிட்டு வருகின்றனர்.அயல்நாட்டு காய்கறிகளை சாகுபடிசெய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒருங்கிணைந்த தோட்டக்கலைவளர்ச்சித்திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் 200 ஹெக்டர் பரப்பில்அயல்நாட்டு காய்கறிபரப்புவிரிவாக்கத்திட்டம்செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில்பயன்பெறஅயல்நாட்டு காய்கறிகள்சாகுபடி செய்யும் விவசாயிகள் உரிய ஆவணங்களான சிட்டா, அடங்கல்,அனுபோக சான்று, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல்,வங்கி கணக்குபுத்தகநகல் மற்றும் புகைப்படம் போன்றவற்றைவிண்ணப்ப படிவத்துடன்இணைத்துவட்டார தோட்டக்கலைஉதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. பதிவு செய்த விவசாயிகளின் நில ஆவணங்கள் ஆய்வு செய்த பின்புதோட்டக்கலைத்துறைகள அலுவலர்கள் விவசாயிகளின் தோட்டத்தில் ஆய்வு மேற்கொள்வர்.
விவசாயிகளால் உரிய பட்டியல்கள் சமர்ப்பித்த பின்பு ஒரு ஹெக்டருக்கு 50 சதவீத மானியமாக, அதாவது நாற்றுகள்ரூ.25 ஆயிரம், நாட்டு எருரூ.15 ஆயிரத்துக்குவாங்கியமைக்குரூ.40 ஆயிரம்பின்னேற்புமானியமாக விவசாயிகள்வங்கி கணக்கில்செலுத்தப்படும். மேலும் ஒரு ஹெக்டருக்குரூ.10 ஆயிரம் மதிப்புள்ள இயற்கை வேளாண்மை இடுபொருட்கள் வினியோகிக்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில்அயல்நாட்டு காய்கறிகள்சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதிவட்டார தோட்டக்கலைஉதவி இயக்குனர் அலுவலகத்தில்விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலைதோட்டக்கலைத்துறைஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.