செய்திகள்

மராட்டியத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2 ஆயிரத்து 200 ஆக குறைப்பு

மராட்டியத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.2 ஆயிரத்து 200 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்தநிலயில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா சோதனைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய மாநில அரசு கடந்த வாரம் 4 நபர் கமிட்டியை அமைத்தது. மாநில சுகாதார பாதுகாப்பு சமூக தலைமை செயல் அதிகாரி சுதாகர் ஷிண்டே தலைமையிலான இந்த கமிட்டியில் மருத்துவ கல்வி இயக்குனரக இணை செயலாளர் அஜய் சந்தன்வாலே, கிரான்ட் மருத்துவ கல்லூரி பேராசிரியை அமிதா ஜோஷி உள்ளிட்டவர்கள் இடம் பெற்று இருந்தனர்.

நாடு முழுவதும் அரசு ஆய்வகங்களில் இலவசமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் தனியார் ஆய்வகங்களில் அதிகபட்சம் ரூ.4 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்க இந்திய மருத்துவ கவுன்சில் கட்டணம் நிர்ணயம் செய்து உள்ளது.

ரூ.2,200 ஆக குறைப்பு

இந்தநிலையில் மராட்டியத்தில் தனியார் ஆய்வகங்களில் செய்யப்படும் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-

ஆஸ்பத்திரிகள் மூலமாக தனியா ஆய்வகங்களில் கொரோனா சோதனை மேற்கொள்ள ரூ.2 ஆயிரத்து 200 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சென்று மாதிரி சேகரித்து செய்யப்படும் சோதனைக்கு அதிகபட்சம் ரூ.2 ஆயிரத்து 800 கட்டணம் வசூலித்து கொள்ளலாம். இதற்கு முன் இந்த கட்டணம் முறையே ரூ.4 ஆயிரத்து 500, ரூ.5 ஆயிரத்து 200 ஆக இருந்தது.

தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத்தை கூட மாவட்ட கலெக்டர்கள் ஆய்வகங்களுடன் பேரம் பேசி குறைக்கலாம். இதேபோல மாநில அரசு நிர்ணயம் செய்து உள்ள கட்டணத்தை விட அதிகம் வசூலிக்கும் ஆய்வகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலத்தில் 91 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்