செய்திகள்

சாத்தூரில், மொபட்டில் இருந்த 40 பவுன் நகை திருட்டு - பட்டப்பகலில் துணிகர சம்பவம்

சாத்தூரில் பட்டப்பகலில் மொபட் பெட்டியில் இருந்த 40 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.

தினத்தந்தி

சாத்தூர்,

சிவகாசி கவிதா நகர் ஜக்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஸ் பிரபு. இவரது மனைவி ராதிகா (வயது 40). இவர் தனது மகளுடன் சாத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியை முடித்து விட்டு ராதிகாவும், அவரது மகளும் தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி ஒரு பையில் வைத்து மொபட்டின் இருக்கைக்கு அடியில் வைத்தனர். பின்னர் சாத்தூர் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே உள்ள விநாயகர் கோவிலுக்கு முன்பு மொபட்டை நிறுத்தி விட்டு சாமி கும்பிட செய்தனர்.

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மொபட்டின் இருக்கை திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 40 பவுன் நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிகாவும், அவரது மகளும் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்து பார்த்தனர். ஆனால் தகவல் எதுவும் கிடைக்க வில்லை.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப் பகலில் இந்த இந்த திருட்டுச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்