செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளது சஞ்சய்தத் குற்றச்சாட்டு

கடந்த 5 ஆண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளது என்று காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய்தத் கூறினார்.

தினத்தந்தி

நாகர்கோவில்,

ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாகவும், 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதாகவும் மோடி கூறினார். ஆனால் அதை செய்யவில்லை. பணம் மதிப்பிழப்பின் போது நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. மக்கள் தங்களது பணத்தை எடுப்பதற்கே நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருந்தது. வங்கிகளில் கடன் வாங்கி கொண்டு மோசடி செய்த நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.

தன்னை காவலன் என்று சொல்லிக்கொள்ளும் மோடி கார்ப்பரேட் முதலாளிகளான அதானி, அம்பானிகளுக்கும், நீரவ்மோடி, விஜய் மல்லையா போன்றவர்களுக்கு காவலனாக உள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தினர். புலவாமா தாக்குதலில் 40 வீரர்களை பறிகொடுத்தோம். அப்போது உளவுத்துறை எச்சரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. நாங்கள் வாஜ்பாய் மற்றும் அத்வானியை மதிக்கிறோம். ஆனால் மூத்த தலைவர்களை அவர்கள் மதிப்பதில்லை.

இந்த தேர்தல் காந்திக்கும், கோட்சேவிற்கும் இடையே நடக்கும் போராட்டம். காங்கிரஸ் ஆட்சியில் குமரி மாவட்டத்தில் எத்தனை தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டன என கேட்கிறீர்கள். ஆனால் நாங்கள் வருங்காலத்தில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து பேசுகிறோம். தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் சிறுபான்மையினருக்கு கூட்டணியில் சீட் ஒதுக்கியுள்ளோம்.

முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் மோடியிடம் சரணடைந்துள்ளனர். தமிழக அரசை மோடி ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறார். ராகுல் காந்தி அறிவித்துள்ள ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச ஊதிய திட்டத்தில் 14 கோடி ஏழைகள் பயன்பெறுவார்கள். பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல்காந்தி கூறியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி.யை மறு சீரமைப்பு செய்வோம். கல்விக்கான நிதி ஒதுக்கீடு 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக அதிகரிக்கப்படும். இந்த தேர்தலில் மோடி அலை இருக்காது. கோ பேக் மோடி அலைதான் வீசும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து