செய்திகள்

சேலம் மாநகராட்சியில் ரூ.56.42 கோடியில் தார்சாலை, வடிகால் அமைக்கும் பணிகள் - ஆணையாளர் சதீ‌‌ஷ் தகவல்

சேலம் மாநகராட்சியில் ரூ.56.42 கோடி மதிப்பீட்டில் தார்சாலைகள், வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஆணையாளர் சதீ‌‌ஷ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி மண்டலம் 59-வது வார்டில் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலைகள், மழைநீர் வடிகால்கள் அமைத்தல் மற்றும் பேவர் பிளாக் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், ராபர்ட் ராமசாமி தெரு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் மற்றும் பேவர் பிளாக் பதிக்கும் பணிகளையும், ரூ.22 லட்சம் மதிப்பில் பாரதிநகர், இந்திராநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைத்து பேவர் பிளாக் பதிக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

அதேபோல், ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் சிவசக்தி நகர் முதல் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை வரை அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணிகளை பார்வையிட்டு நிர்ணயிக்கப்பட்ட அளவில் ஜல்லி கற்கள், தார் உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், சாலைகள் சீரான அளவில் அமைக்கப்பட வேண்டும் என்றும், மழைநீர் உடனடியாக வடியக்கூடிய வகையில் சாலை அமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. குறிப்பிட்ட கால அளவிற்குள் அனைத்து பணிகளையும் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் ஆணையாளர் சதீஷ் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறுகையில், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2018-2019 நிதி ஆண்டில் ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரண்டு கட்டங்களாக ரூ.56.42 கோடி மதிப்பீட்டில் தார் சாலைகள், மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து பணிகளும் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும், என்றார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் திருமணி நாளங்காடி கட்டுமான பணிகளை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆய்வு செய்து, அந்த பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்