செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தஞ்சை அய்யன்குளத்தை சீரமைக்கும் பணி தீவிரம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தஞ்சை அய்யன்குளத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் ரூ.904 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தஞ்சை சிவகங்கை பூங்கா, ராஜப்பா பூங்கா, பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ்கள் நிறுத்தும் பஸ் நிலையம் ஆகியவற்றில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மேலவீதியில் உள்ள அய்யன்குளம், கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ள சாமந்தான் குளம் ஆகிய 2 குளங்களும் புதுப்பொலிவு பெற உள்ளன.

இதில் மேலவீதியில் உள்ள அய்யன்குளம் 7 ஆயிரத்து 437 சதுரமீட்டர் பரப்பளவை கொண்டது. இந்த குளம் நாயக்க மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்டது. இந்த குளத்தில் உள்ள படித்துறைகள் முற்றிலும் சிதிலமடைந்து குளம் மோசமான நிலையில் காணப்பட்டது.

தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த குளம் புதுப்பொலிவு பெற உள்ளது. குளத்தின் 4 புறமும் படித்துறைகள் அமைக்கப்படுகின்றன. குளத்தை சுற்றி வலம் வரும் வகையில் நடைபாலமும் அமைக்கப்பட்டுள்ளன. குளத்தின் மையப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்வதற்காக பாலமும் அமைக்கப்பட்டு வருகின்றன. இரவில் இந்த குளம் ஜொலிக்கும் வகையில் மின் விளக்கு வசதிகளும் செய்யப்பட உள்ளன. இந்த பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது.

இதைப்போல சாமந்தான் குளத்திலும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த 2 குளத்திலும் ரூ.8 கோடியே 76 லட்சத்து 70 ஆயிரத்து 991 செலவில் பணிகள் நடைபெறுகிறது. அய்யன்குளத்தில் நடைபெறும் பணிகள் இன்னும் 2 மாதங்களில் முடிவடையும் என தெரிகிறது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை