செய்திகள்

பொய்கை ராமாபுரம் கிராமத்தில், காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் வேடிக்கை பார்த்த 16 பேர் படுகாயம்

பொய்கை ராமாபுரம் கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் வேடிக்கை பார்த்த 16 பேர் மாடுகள் முட்டியதில் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

அணைக்கட்டு,

அணைக்கட்டு தாலுகா பொய்கையை அடுத்த ராமாபுரம் கிராமத்தில் நல்லதாயம்மன்கோவில் திருவிழாவை முன்னிட்டு 59-ம் ஆண்டாக நேற்று காளைவிடும் விழா நடந்தது. இதில் பங்கேற்பதற்காக ஆந்திர மாநிலத்திலிருந்தும், வாணியம்பாடி, குடியாத்தம், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் 196 காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. காளைவிடும் விழாவை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள் அங்குள்ள கோவில் மீதும் வீடுகளின் மாடிகள் மீதும் அமர்ந்து சீறிப்பாயந்து ஓடும் காளைகளை ரசித்தனர்.

காளைகளை கால்நடை மருத்துவர் சுபத்திரா பரிசோதனை செய்தார். அதன்பின்னர் அவை களம் இறக்கப்பட்டன. விழாவை உதவி ஆணையர் பூங்கொடி (கலால்) அனுமதியுடன் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கீதா, துணை தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதனை தொடர்ந்து காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து ஓடின. காளை ஓடும் தெருவின் இருபுறமும் சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பார்வையாளர்கள் காளை ஓடும் தெருவில் நின்றுகொண்டு காளைகளை உற்சாகப்படுத்தினர். அப்போது பல காளைகள் தெருவில் ஓடாமல் பார்வையாளர்கள் பக்கம் ஓடின. இதனால் வாலிபர்கள் சிதறி ஓடினார்கள்.

அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர். காளைவிடும் விழாவில் முகாமிட்டிருந்த மருத்துவ குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.75 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.60ஆயிரம் உள்பட 47 பரிசுகள் வழங்கப்பட்டன. வருவாய் ஆய்வாளர் தேவிகலா, கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி மற்றும் காளைவிடும் நிர்வாகக் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். விரிஞ்சிபுரம் போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை ராமாபுரம் கிராம வாலிபர்கள் செய்திருந்தனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்