மீஞ்சூர்,
மீஞ்சூரை அடுத்த ஊரணம்பேடு கிராமத்தில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் சார்பில் புதிதாக அனல் மின் நிலையம் கட்டப்படுகிறது. இங்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ளவர்கள் கட்டிட வேலை செய்து வரும் நிலையில் வாயலூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 20), கரண் (19), பிரபு (22) ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ரூ.1 லட்சம் மதிப்புள்ள இரும்பு கம்பிகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.