செய்திகள்

திருவாரூரில், இன்று விதை பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விதை பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவாரூரில் இன்று(வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று விவசாயிகள் சங்க மாநில துணைச்செயலாளர் கூறினார்.

தினத்தந்தி

திருவாரூர்,

அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் சிப்ஸ் தயாரிக்கும் ஆலைகளை இந்தியாவில் நடத்தி வருகிறது. இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வரும் உருளை கிழங்குகளை, சிப்ஸ் தயாரிப்பதற்கான நிலையில் மரபணு மாற்றம் செய்து புதிய உருளை கிழங்கு விதைகளை உருவாக்கி அதை பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை சட்டத்தின்படி 2016-ம் ஆண்டு பதிவு செய்துள்ளது.

விவசாயிகள் தங்கள் சாகுபடியில் விளைவித்த எந்த ஒரு பொருளையும் தன் விருப்பத்துக்கு பயன்படுத்தவோ, சேமிக்கவோ, விற்கவோ உரிமை உண்டு. இதற்கு தடை விதிக்க முடியாது

ஆர்ப்பாட்டம்

மூல விதைகளுக்கு சொந்தமான விவசாயிகள் மீதே வழக்கு போட்டு இழப்பீடு கோரும் வெளிநாட்டு கம் பெனியை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். எனவே வெளிநாட்டு கம்பெனிகள் விதை பாதுகாப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து இன்று (வியாழக் கிழமை) திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதில் திரளான விவசாயிகள் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்