செய்திகள்

விருத்தாசலத்தில் நெல்லுக்கு உரிய விலை கேட்டு விவசாயிகள் மறியலில் ஈடுபட முயற்சி

விருத்தாசலத்தில் நெல்லுக்கு உரிய விலை கேட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருத்தாசலம்,

விருத்தாசலத்தில் மிகப்பெரிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைந்துள்ளது. இந்த ஒழுங்குமுறை கூடத்துக்கு கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில் விளைந்த தானியங்களை மூட்டைகளாக கட்டிக்கொண்டு வந்து விற்பனை செய்து விட்டு செல்வார்கள். அறுவடை நேரங்களில் இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கொள்முதல் நடைபெறும். தற்போது சம்பா அறுவடை பணிகள் தொடங்கி உள்ளதால், ஏராளமான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் மூட்டைகள் தேங்கி இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 10 ஆயிரம் நெல் மூட்டைகள்வந்தன.

ஆனால் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல் கொள்முதல் செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல்லுக்கு உரிய விலை வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் 10 ஆயிரம் நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஆனால் நேற்றும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி அறிந்த கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப் பதாக தெரிவித்தனர். இதையேற்ற விவசாயிகள் மறியலில் ஈடுபடும் முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...