சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. இதில் சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்ப்பட்டு, திருவள்ளூர்,மதுரை, தேனி, விழுப்புரம், நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டக்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இன்று கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்ட மாவட்டங்கள் விவரம்:-
* நெல்லை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி கொரோனா தொற்றால் மேலும் 204 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,423 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,318 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். 1,886 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவிற்கு மாவட்டத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
* திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 301 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10,928 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,892 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். 6,547 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவிற்கு மாவட்டத்தில் 188 பேர் உயிரிழந்துள்ளனர்.