செய்திகள்

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; இன்று 15 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 30 பேரின் உயிரை கொரோனா நேற்று பறித்து உள்ளது. இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்து உள்ளது. தமிழக மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 1,362 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் இதுவரை 15 பேர் உயிரிழந்து உள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவொற்றியூரை சேர்ந்த 42 வயது பெண் உள்பட 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதேபோன்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் திருமுல்லைவாயல், கொடுங்கையூர், அம்பத்தூர், விருகம்பாக்கம், கீழ்ப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை