செய்திகள்

இந்திய கடற்படைக்கு மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவை - கடற்படை தளபதி

இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவைப்படுவதாக விமானப்படை தளபதி கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய கடற்படை தினம் டிசம்பர் 4 ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் இன்று கடற்படை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது இந்திய கடற்படை தளபதி கரம்பீர் சிங் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவைப்படுவதாக கூறினார்.

இந்திய கடற்படைக்கு மேலும் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் தேவைப்படுகிறது. இதன் மூலம் இரண்டு கப்பல்கள் எந்நேரமும் செயல்பாட்டில் இருக்குமாறு நாம் பார்த்துக் கொள்ள முடியும்.

மேலும் அவை 65,000 டன் எடையுடன், மின்காந்த உந்துவிசை கொண்ட கப்பல்களாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருவதாகவும், அதனை இந்திய கடற்படை தொடர்ந்து முறியடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை